நம்தேசம் சார்பில் 16-02-2017 அன்று நம்தேசம் அமைப்பு மற்றும் இன்போசிஸ் நிறுவனம் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிபுன்னியம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு தேவையான சுமார் 2,00,000 (இரண்டு இலட்சங்கள்) மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத கிராமபுறத்தில் அமைந்துள்ள செட்டிபுன்னிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நம்தேசம் சார்பில் வழங்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் :-

1. ரூபாய் 1,17,000 மதிப்பிலான பள்ளியில் படித்துவரும் மாணவர்கள் அமர தேவையான மேசைகளும் நாற்காலிகளும்.

2. ரூபாய் 50,000 மதிப்பிலான இரும்பினால் செய்யப்பட்ட 5 பீரோக்கள்.

3. ரூபாய் 16,000 மதிப்பிலான பள்ளி ஆசிரியர்கள் வகுப்பில் அமருவதற்கான 8 இரும்பு நாற்காலிகள்.

4. ரூபாய் 6000 மதிப்பிலான டிவிடி பிளேயர்கள் 2.

5. ரூபாய் 10,000 மதிப்பிலான கணினி மேசைகள் 5.

நம்தேசம் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

செட்டிபுன்னியம் பள்ளிக்கு இதற்கு முன்னதாக கடந்து இரண்டு ஆண்டுகளில் கழிப்பறை வசதிக்காக கழிப்பிட கட்டிடமும், குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.

16-02-2017 அன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் நம்தேசம் சார்பில் நம்தேசம் நிறுவனர் சந்திரசேகர் மற்றும் சுனிதா, மூத்த ஆலோசகர் திரு.பொன்ராஜ் அண்ணன் அவர்களும், நம்தேசத்தின் நிர்வாகிகளில் ஒருவரான திருமதி.தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் அவர்களும்,
தோழர் ரீகன் அவர்களும்
நம்முடைய சேவைகளுக்கு என்றும் உடனிருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தை சேர்ந்த உயரதிகாரிகளும் இருந்தனர்.

இந்நிகழ்வில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இப்பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தை சார்ந்தவர்கள்.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.ஜோசப் அவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக தனது மூன்று பிள்ளைகளையும் இதே பள்ளியிலேயே படிக்க வைப்பது சிறப்பான ஒன்றாகும்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டது அனைவருக்கும் ஒரு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்தது.