கடந்த 12-12-2016 திங்கட்கிழமை சென்னையை தாக்கிய வர்தா புயலால் கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம் முற்றிலுமாக சேதமடைந்தது.

இந்த கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் சுமார் 1200க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 3000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்தும் வருகின்றனர்.

மின்சார கம்பிகள் வீடுகளின் மேல் விழுந்தும்,மரங்கள் வேறோடு சாய்ந்தும் புயல் தாக்கியதில் அந்தப்பகுதி மிகமோசமாக பாதிக்கப்பட்டு கடந்த ஐந்து நாட்களுக்கும் மேல் குடிக்க/குளிக்க தண்ணீர் இல்லாமலும்,உண்ண உணவு இல்லாமலும்,இளம் குழந்தைங்களுக்கு பால்,ரொட்டிக்கூட இல்லாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் தவிப்பதையறிந்து கடந்த சனிக்கிழமையன்று “நம்தேசம் அறக்கட்டளை” சார்பில் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமை சேர்ந்த சுமார் 900குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லாத காரணத்தால் தற்போதைய அவசிய தேவைகளான “கொசுவர்த்தி சுருள்களும்,பால் பவுடர்களும்” வழங்கப்பட்டன.

இதுபோன்ற இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து அவர்கள் மீண்டுவர உதவியதில் “நம்தேசம் அறக்கட்டளை” பெருமகிழ்ச்சி அடைகின்றது.

இப்படிக்கு
நம்தேசம் நிர்வாகம்