இன்று (28-02-2017) மாலை 3மணியளவில் நம்தேசம் சார்பில் அனகாபுத்தூரில் உள்ள தேசிய பார்வையற்றோருக்கான கூட்டமைப்பு (NFB) அலுவலகத்திற்கு சென்று பார்வையற்று கல்லூரிகளில் சேர்ந்து பட்டப்படிப்பு மற்றும் அரசு தேர்வுகளுக்கு படித்து வரும் சுமார் 84 பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்கு (SanDisk 8Gb Pendrive,Files,Walking Stick) அவர்கள் படிப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பிற்காக தகவல்களை பராமரிக்க பயன்படும் ஓர் இரும்பு பீரோ ஆகியன வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு NFB Project Director திரு.மனோகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இன்போசிஸ் கணிப்பொறி நிறுவன துணைத் தலைவர் திரு.அம்மையப்பன் அவர்கள் இன்போசிஸ் கணிப்பொறி நிறுவன திட்ட மேலாளர் திரு.மணி அவர்கள் நம் தேசம் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் திரு.சந்திரசேகர் அவர்கள் இனைந்து பார்வையற்ற பட்டதாரி மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

கடந்த வருடத்தில் இதே பார்வையற்ற மாணவர்களுக்கு நம்தேசம் தலைமையில் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

28-02-2017 அன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் நம்தேசம் சார்பில் நம்தேசம் நிறுவனர் சந்திரசேகர் மற்றும் சுனிதா, மூத்த ஆலோசகர் திரு.பொன்ராஜ் அண்ணன் அவர்களும், நம்தேசத்தின் நிர்வாகிகளில் ஒருவரான திருமதி.தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் அவர்களும்,
தோழர் ரீகன் அவர்களும்,கிருபா அக்கா அவர்களும்,நம்தேசம் அமைப்பின் மருத்துவ அணியும் மூத்த மருத்துவரான திருமதி.பானு டாக்டர் அவர்களும்,நம்தேசத்தின் சட்ட ஆலோசகர் திரு.அழகேந்திரன் அண்ணன் மற்றும் முத்து அண்ணன் அவர்களும்
உதவி இயக்குநர் சக்தி அவர்களும் தோழர்கள் தருண், ஜெகதீஷ், மீனாட்சி, நீலிமா,எழில்தேவி,பரணியா
மற்றும் பல நண்பர்களும் நம்தேசத்தின் உறவுகளும் உடனிருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டது அனைவருக்கும் ஒரு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்தது